US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!
அமெரிக்காவின் அயோவாவில் 16 வயது சிறுவனுக்கு சிலந்தி கடித்து தொற்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோவாவின் ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்த நோவா ஜான்சன் என்ற 16 வயது சிறுவன் சகோதரரின் நிறுவனத்தில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருக்கும்போது அவரது கன்னத்தில் சிலந்தி கடித்துள்ளது.
கன்னத்தில் கடித்ததை முதலில் பெரிதாக கண்டுகொள்ளாத சிறுவனுக்கு சிறிது நாட்களுக்குப் பிறகு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடிப்பட்ட இடம் பெரிதாகி இரண்டு கருப்பு துளைகள் வந்ததாகவும் இதனால் சிறுவனுக்கு வலி அதிகமானதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அந்த சிறுவன் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு சிலந்தி கடியால் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அவருக்கு ஆன்டிபயாடிக் அளித்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று தீவிர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவர்கள் மாற்றியிருக்கின்றனர்.
மருத்துவர்கள் தொற்றைக் கண்டு பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி உள்ளனர்.
ஒரு நாள் கழித்து ஜான்சனின் சிறுநீரகங்கள் செயலிழக்க தொடங்கியதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதற்காக அந்த சிறுவன் ஐசியூ-வில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் குடலில் ஒரு சிறிய தொற்று ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தேவையான உதவிகளை பெற GOFUNDME என்ற பக்கத்தை நண்பர்கள் தொடங்கி சிறுவனின் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர்.