``ரூ.232 கோடி மோசடி'' - இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ராகுல் விஜய் கைது; CBI ந...
US Tariff: ``இந்தியா மீது ட்ரம்ப் 50% வரி விதிக்க உண்மையான காரணம் இதுதான்'' - ஜெஃப்ரிஸ் அறிக்கை
அமெரிக்காவின் பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஜெஃப்ரிஸ், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பதை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் தனிப்பட்ட கோபம்
"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நீண்டகால பகையை முடிவுக்கு கொண்டுவருவதில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை இந்தியா அனுமதிக்கவில்லை.
இதனால், ட்ரம்பிற்கு ஏற்பட்ட தனிப்பட்ட கோபமே வரி விதிப்பதற்கான முக்கிய காரணமாகும்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பிரச்னைகளில் பிற நாடுகளை இந்தியா அனுமதிக்காது என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது."
விவசாயம்
அடுத்ததாக, விவசாயமும் இந்தியா மீதான வரிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியாவில் 250 மில்லியன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். இந்தியாவின் 40% தொழிலாளர்கள் விவசாயத்தைத் தான் நம்பி இருக்கிறார்கள்.
அதனால், இந்திய அரசு விவசாயத் துறையில் இறக்குமதிகளை ஊக்குவிக்கவில்லை. இதுவும் ட்ரம்ப் அரசாங்கம் வரி விதித்ததற்கான முக்கிய காரணமாக உள்ளது.
"இந்த நிலை, இந்தியாவையும் சீனாவையும் நெருக்கமாக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...