செய்திகள் :

Usha Vance: அமெரிக்க துணை அதிபரானார் 'இந்திய மருமகன்' - வைரலாகும் உஷா வான்ஸின் ரியாக்‌ஷன்! | VIDEO

post image

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து கவனம் பெற்றவர் துணை அதிபராகப் பதவியேற்ற ஜேடி வான்ஸின் மனைவி உஷா வான்ஸ். ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சில்லுகுரியின் பெற்றோர், 70-களில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்ததாகக் தெரிகிறது. அங்கேயே பிறந்து வளர்ந்து, இந்து மதத்தைப் பின்பற்றிய உஷா சிலுகுரி, 2013-ம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் படிக்கும் போது, கத்தோலிக்க கிறிஸ்தவரான ஜேடி வான்ஸை சந்தித்திருக்கிறார்.

அப்போதுமுதல் காதலித்து வந்த இருவரும், 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இவான், விவேக் என்ற இரண்டு மகன்களும், மிராபெல் என்ற மகளும் உள்ளனர். சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார் உஷா வான்ஸ். இந்த நிலையில், அமெரிக்கத் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜேடி வான்ஸ், நேற்றுப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்வில், உஷா சிலுகுரி வான்ஸ் தன் கணவரை பெருமையுடன் பார்த்து, பூரித்து மகிழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

துணை அதிபராகப் பதவியேற்ற ஜேடி வான்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த டொனால்டு ட்ரம்ப், “துணை அதிபர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் இந்தப் பொறுப்புக்கு சரியான தேர்வு. இனி, நான் இவரை ’துணை அதிபர் ஜே டி வான்ஸ்’ என்றே அழைக்கலாம். அவரது அழகான மனைவி உஷாவுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

Divorce Temple: திருமண உறவை முறித்து கொள்ள தம்பதிகள் செல்லும் `விவாகரத்து கோயில்'- எங்கே இருக்கிறது?

கோயிலுக்குச் சென்றால் திருமணம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு கோயிலுக்குச் சென்றால் விவாகரத்து நடக்குமாம். ஜப்பானில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு "விவாகரத்து கோயில்" என்று பெயர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் துறவறம் பூண்ட நடிகை மம்தா குல்கர்னி அகாரா மடத்தில் இருந்து நீக்கம்..! பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிறகு உத்தரப்பிரதேசத்தில் நடந்து வர... மேலும் பார்க்க

உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்' - எங்கே?

குடித்துவிட்டு கார், பைக் என எந்த வாகனத்தையும் ஓட்டி ஃபைன் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஸ்வீடனில் ஒரு குடிமகன் குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்காக அபராதம் கட்டியுள்ளார், அதுவும் 2,52,194 ரூப... மேலும் பார்க்க

China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆண்டு முடிவு போனஸாக அதன் ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன்.ஊழியர்கள் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியு... மேலும் பார்க்க

வகுப்பறையில் மாணவனைத் திருமணம் செய்தாரா பேராசிரியை? வைரலான வீடியோ - என்ன நடந்தது?

மேற்கு வங்க மாநிலம், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில், பேராசிரியை முதலாமாண்டு மாணவரைத் திருமணம் செய்வதுபோல பரவிய வீடியோவால், பல்கலைக்கழக நிர்வாகம் அந்த பேராசிரியையை ... மேலும் பார்க்க

Kumbh Mela: அதிகாலையில் மரண ஓலம்; பலி 30 ஆக அதிகரிப்பு... கும்பமேளா கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் நேற்று மிகவும் முக்கியமான நாள் ஆகும். மெளனி அமாவாசையான நேற்று மட்டும் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று ஏற்கெனவே எதிர்பார்த... மேலும் பார்க்க