கடைசி நாள் படப்பிடிப்பு... கண்கலங்கி அழுத சுந்தரி தொடர் நடிகர்கள்!
Vetrimaaran: "ஆம்ஸ்ட்ராங் ஒடுக்குமுறைக்கு எதிரானவர்" -இயக்குநர் வெற்றிமாறன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கு சென்னையையே உலுக்கியது.
இந்நிலையில் இந்நிலையில் நேற்று (நவம்பர் 16) ஆம்ஸ்ட்ராங் பற்றிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், "ஆம்ஸ்ட்ராங் என்பது ஒரு மனிதனின் பெயரல்ல, அது ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு வடிவமாக, உருவமாகப் பார்க்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் சமமாக கிடைக்கணும். மேல - கீழ என சமத்துவமின்மை இருக்கக்கூடாது என்பதற்காகப் பணி செய்த ஒரு ஆளுமைமிக்கத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். தன்கிட்ட வந்த எல்லாரையுமே படி என்று சொல்லி படிக்க வைத்தவர். கல்வி மட்டுமில்ல அரசியல் கல்வியையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தவர். பெண்களின் கல்வி, அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து செயல்பட்டவர்.
அவரின் ஒவ்வொரு வேலையும், செயலும் சமத்துவத்தை நோக்கியதுதான். இந்த சமூகத்துல சமத்துவத்தை உருவாக்கணும் என்று உழைத்தவர். அவர் ஒரு தனிமனிதரல்ல, ஓர் அரசியல் இயக்கம்" என்று பேசியிருக்கிறார்.