Viduthalai 2 : வெற்றிமாறனின் விடுதலை - பாகம் 2 | Social Media Review
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன், சூரியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி `விடுதலை’ படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. "விடுதலை" படத்தை தொடர்ந்து அதன் 2-ம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது.
விடுதலை 2-ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் போன்ற நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில், காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த நிலையில், விடுதலை 2 பார்த்த ரசிகர்கள் படம் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர். அதன் தொகுப்பு இங்கே..!
(குறிப்பு: இது சமூக வலைதங்களில் ரசிகர்களால் படம் குறித்து பதியப்பட்ட கருத்துகள்.)