கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' - ராகு கேது தரும் பலன்கள்
Vietnam : வியட்நாம் விநோதம்... தோட்டம் வைத்து வளர்க்கப்படும் விஷப் பாம்புகள்! ஏன் தெரியுமா?
காய்கறிகள், பழ வகைகள், பூக்கள் ஆகியவற்றைத் தோட்டம் வைத்து வளர்க்கப்படுவதை இங்கு நாம் நேரிலேயே சென்றுகூடப் பார்த்திருப்போம். ஆனால், பாம்புகளுக்கு என்று தோட்டம் வைத்து அவற்றை வளர்ப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வியட்நாமில் அத்தகைய தோட்டம் இருக்கிறது. இந்த அரிய வகை தோட்டத்தைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
வியட்நாம் நாட்டில் dong tam என்ற பண்ணைத் தோட்டத்தில் இவ்வாறு பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு 400-க்கும் மேற்பட்ட விஷத்தன்மைக் கொண்ட பாம்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பாம்புகளின் விஷத்தைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மேலும், பாம்பு கடிக்குப் பயனுள்ள மாற்று மருந்துகளையும் தயாரிக்க இங்கு பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஆராய்ச்சி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பாம்பு தோட்டத்தை, தற்போது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேரில் வந்து பார்க்கும் பிரபல சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.
அதற்கேற்றார் போல, அங்கு மரம் முழுக்க நிறைந்திருக்கும் பாம்புகளைச் சுற்றுலாப் பயணிகள் காண இடவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.