செய்திகள் :

Vijay Antony: "எல்லாமே கடன்தான்!'' - 'மார்கன்' பட விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு

post image

விஜய் ஆண்டனி அடுத்தடுத்த பட லைன் அப்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். அப்படி விஜய் ஆண்டனியின் அடுத்த வெளியீடு 'மார்கன்'.

இப்படம் அடுத்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, பிரிகிடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

Vijay Antony - Maargan
Vijay Antony - Maargan

இந்த நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசுகையில், "தொடர்ந்து நான் படங்களைத் தயாரிப்பதைப் பார்த்து, என்னிடம் அதிகப் பணம் இருப்பதாக நினைத்துவிடாதீர்கள்.

எல்லாமே கடன்தான், அதற்கு மாதம் மாதம் வட்டியும் உண்டு. இந்தப் படத்தின் இயக்குநர் லியோவை எனக்கு 'பிச்சைக்காரன்' படத்தின் எடிட்டிங் சமயத்தில் இருந்தே தெரியும். நான் செய்த தவறை அவர் செய்யக் கூடாது.

நான் நடிக்க வந்த பிறகு இசையமைப்பதை நிறுத்திவிட்டேன். நீங்கள் படம் இயக்கினாலும், உங்களுடைய இயக்குநர்களுடன் இணைந்து எடிட்டிங் செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நிகழ்வுகள் சில இருக்கும்.

அந்த வகையில் 'டிஷ்யூம்' படத்தின் மூலமாக இயக்குநர் சசி சார் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து 'பிச்சைக்காரன்' படத்தின் மூலமாக என்னை கதாநாயகனாக நிறுத்தினார். இப்போது மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறேன்.

Vijay Antony - Maargan
Vijay Antony - Maargan

நான் மதம் சாராத ஒரு நபர். ஜாதி, மதம் உலகத்தில் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். நான் பார்க்கும் அனைத்திலும் ஒரு நல்ல விஷயமும், எல்லா மனிதர்களிடமும் ஒரு ஆற்றல் இருப்பதாக நம்புபவன்.

எல்லோருடைய நம்பிக்கைகளையும் நான் மதிப்பேன். 'பிச்சைக்காரன்', 'சலீம்' படங்களில் ஆன்மீக அம்சங்கள் தானாகவே வந்துவிட்டன.

இப்போது என்னுடைய அடுத்த படங்களுக்கு நானே இசையமைக்கிறேன். இதைத் தாண்டி, மற்ற கதாநாயகர்களின் படங்களுக்கும் நான் இசையமைக்கவிருக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களைத்தான் தயாரித்தேன்.

இந்த வருடத்தில் என்னுடைய பொருளாதார நிலைமையைப் பார்த்து, மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பேன்." என்றார்.

'வீட்டிற்கு அழைத்து 'மகாராஜா'வை பாராட்டிய 'Birdman' பட திரைக்கதையாசிரியர்' - நெகிழ்ந்த நித்திலன்

'குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இ... மேலும் பார்க்க

Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி

‘தக் லைஃப்’ திரைப்படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்திருக்கிறது. ஆம், ரஹ்மான் இசைக்கு இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் மெட்டுக்கு க... மேலும் பார்க்க

Dhanush: `மகனே வா!' - யாத்ராவை கட்டியணைத்து நெகிழ்ந்த தனுஷ், ஐஸ்வர்யா; வாழ்த்திய ரஜினி

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் 2008-ல் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சு... மேலும் பார்க்க

Ravi Mohan: "கடவுளின் அருளால் அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும்"- நடிகர் ரவி மோகன்

தென்னிந்திய ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் (Southern Street Premier League) நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், “என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்... மேலும் பார்க்க

Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி

'சரிகமப' லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் ... மேலும் பார்க்க