செய்திகள் :

Vijay: 'இந்தியா' கூட்டணிக்கு விஜய்யை அழைக்கும் செல்வப்பெருந்தகை; பின்னணி என்ன?

post image

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே எங்கும் இருக்கக் கூடாது என மிகத் தீவிரமாகக் களம் கண்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி. பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களை விஜய் நேரில் சந்திக்கிறார். அதற்குக் காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம். இதை ஏற்கனவே காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. மக்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இது குறித்து சட்டப்பேரவையிலும் பேசப்பட்டுள்ளது. இந்துத்துவா சக்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், இந்தியா கூட்டணிக்குத்தான் விஜய் வர வேண்டும். அதுதான் அவருக்கும், அவரது கொள்கை, கோட்பாட்டுக்கும் நல்லது" என்றார்.

விஜய்
விஜய்

முன்னதாக த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், "கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும்தான் எதிர்க்கப் போகிறேன். ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா? இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்.

பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி. கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை. இரண்டும் நமது இரண்டு கண்கள். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்" என்றார்.

மோடி, ஸ்டாலின் | பாஜக - திமுக
மோடி, ஸ்டாலின் | பாஜக - திமுக

இதேபோல் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "இன்றைக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாத ஒரு அரசு மேலே இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கிருக்கின்ற அரசு மட்டும் எப்படி இருக்கிறது. வேங்கைவயல் பிரச்னைக்குச் சமூக நீதி பேசுகிற, இங்கே இருக்கின்ற அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் இன்று பார்த்தால் வெட்கப்பட்டுத் தலைகுனிவார். பெண்களுக்கு, மனித உயிர்களுக்கு எதிரான எத்தனையோ பிரச்னைகள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு.

தினமும் நடக்கின்ற பிரச்னைகளுக்குச் சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதில், சம்பிரதாயத்துக்காக மழை நீரில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நாமும் சம்பிரதாயத்துக்காகச் சில நேரங்களில் அந்த மாதிரி செய்ய வேண்டியதாகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எங்கு என்ன பிரச்னை நடந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காக உணர்வுப்பூர்வமாக இருப்பேன். மக்கள் உரிமைகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூக நீதி பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் இருநூறு வெல்வோம் எனும் எகத்தாள ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வருகின்ற உங்கள் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்" எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியா’ கூட்டணி
‘இந்தியா’ கூட்டணி

இந்த சூழலில் விஜய்யை இந்தியா கூட்டணிக்கு செல்வப்பெருந்தகை அழைத்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை, "காங்கிரஸ் தலைவர் அண்ணன் செல்வப் பெருந்தகை தாங்கள் தற்போது பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் தி.மு.க கூட்டணியால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறாரா? விஜய்யை அழைப்பது விஜய் மீது இருக்கும் நம்பிக்கையினாலா? அல்லது தங்கள் இந்தியா கூட்டணிமீது இருக்கும் அவநம்பிக்கையினாலா?" எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்திருக்கிறார். அகில இந்தியத் தலைமை அறிவுறுத்தலின்படி சொல்லியிருக்க மாட்டார். ஏனெனில் இந்தியா கூட்டணியில் தி.மு.க இருக்கிறது. மேலும் விஜய் தனது அரசியல் எதிரியாக தி.மு.கவை அறிவித்துவிட்டார். பிறகு எப்படி இந்தியா கூட்டணிக்கு அவர் செல்வார். தி.மு.க கூட்டணிக்குள் நெருக்கடி ஏற்பட்டு இப்படிப் பேசுகிறாரா செல்வப்பெருந்தகை எனத் தெரியவில்லை. 2026 தேர்தலில் பா.ஜ.கவைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றால், தி.மு.க கூட்டணிக்குள்தான் காங்கிரஸ் இருக்க வேண்டும்.

குபேந்திரன்
குபேந்திரன்

அதேநேரத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தோல்வியைச் சந்தித்து தடுமாற்றத்திலிருந்தால் காங்கிரஸ் வேறு கூட்டணி குறித்து ஆலோசிக்கும். இதற்கிடையில் தி.மு.க கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டு காங்கிரஸ் வெளியேறினால், அப்போது விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம். அந்த நேரத்தில் நான் அப்போதே அழைத்தேன் என்று சொல்வதற்கு இந்த பேட்டி உதவி செய்யும். ஆனால் இதெல்லாம் நடக்க வாய்ப்பு குறைவுதான். எனவே எதற்காக விஜய்யை அழைத்தார் என்பதை செல்வப்பெருந்தகைதான் விளக்க வேண்டும்" என்றார்.

வார்த்தை தவறிய STALIN, நிறைவேற்றாத வாக்குறுதிகள்! | Elangovan Explains

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,சுமார் 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்தது திமுக. ஆனால் அதில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். பெரும்பாலான வாக்குறுதிகள் காற்றில் பறந்த படி உள்ளன. என்... மேலும் பார்க்க

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்... மேலும் பார்க்க

'நானே நேர்ல வரேன்' அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில் - பரந்தூர் விசிட் பின்னணி

வருகிற 20 ஆம் தேதி பரந்தூருக்கு நேரில் செல்லவிருக்கிறார் தவெக கட்சியின் தலைவர் விஜய். புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் மத்தியில் உரையாற்றவும... மேலும் பார்க்க

``உங்கள் பெற்றோர்களும் இப்படி நினைத்திருந்தால்..." - DINK கொள்கையாளர்களை சாடிய சந்திரபாபு நாயுடு

ஆந்திராவைப் பொறுத்தவரையில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் பல ஆண்டுகளாக அமலில் இருந்தது.இவ்வாறான சூழலில், கடந்த ஜூன் மாதம் ... மேலும் பார்க்க

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க``உண்மைதானே... 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க 9 தொகுதிகளையும், தி.மு.க 13 தொகுதிகளையும் கைப... மேலும் பார்க்க