சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?
Vikatan Digital Awards: ``100 வருட விகடனைப் போல பிளாக்ஷீப்பை உருவாக்கணும்'' - RJ விக்னேஷ்காந்த்
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 13 அன்று நடைபெற்றது.

Digital ICON RJ விக்னேஷ்காந்த்
இந்நிகழ்ச்சியில் RJ விக்னேஷ்காந்த்துக்கு Digital ICON விருது வழங்கப்பட்டது. விகடன் குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன் வழங்க, விக்னேஷ்காந்த் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய விகடன் குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன், "மொதல்ல பிளாக்ஷீப் டிஜிட்டல் அவார்ட் நமக்கு கொடுத்தாங்க. இன்னைக்கு நாம் இவருக்கு கொடுத்திருக்கோம்.
அன்னைக்கு, இந்த மாதிரி டிஜிட்டல் அவார்ட் நாங்க நடத்தணும்னு நெனச்சோம், ஆனா பிளாக்ஷீப் முந்திக்கிட்டாங்க என்று சொன்னேன். இப்போ நாங்க லேட்டா வந்தாலும் நல்லா பண்ணியிருக்கோம்னு நெனைக்கிறேன்" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய விக்னேஷ்காந்த், "பிளாக்ஷீப் அவார்ட் சார் கைல இருக்கும்போது எவ்ளோ கௌரவமா இருந்துச்சோ அதே மாதிரி இன்னைக்கு இருக்கு.
OG என்பதை என்னைக்குமே நான் சொல்லிக்கமாட்டேன். நம்ம விஜய் வரதராஜ் அண்ணன்தான் உண்மையான OG.
2019-ல் நம்பிக்கை விருது கொடுத்து விகடன் எங்களை ஊக்கப்படுத்தியது.
விகடன் எங்களைத் தட்டுக்கொடுத்து வழங்கிய விருதால் இன்னைக்கு என்னவெல்லாம் நடந்திருக்கு என்றால், பிளாக்ஷீப் இயக்குநர்களால் 5 படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கு.
3 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கு. 2 படங்கள் பூஜை போடப்பட்டிருக்கிறது. இவ்வளவுதூரம் வளர்ந்ததற்கு முதல் காரணம் அந்த நம்பிக்கைதான், விகடனுக்கு நன்றி.

முன்னாடிலாம் எந்த பின்புலமுமில்லாத 1000 கிரியேட்டர்ஸ் உருவாக்கணும் என்பதுதான் இலக்குனு சொல்லுவேன்.
இந்த விருது வாங்குனதுக்கு அப்புறம் இப்போ யாராவது என்கிட்ட உன்னோட இலக்கு என்னனு கேட்டா, தமிழ்ல 100 வருடம் தொடுகின்ற முதல் ஊடகம் மட்டுமல்லாமல், 100 வருடமாக வந்த எல்லா டிரெண்ட்டுக்கும் தன்னை தகவமைச்சுக்கிட்ட நிறுவனமாக இருக்கும் விகடன் நிறுவனத்தைப் போல பிளாக்ஷீப்பை உருவாக்கணும்னு ஆசைப்படுறேன்." என்று கூறினார்.