kanguva: "என்னையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்" -'கங்குவா' குறித்து விஜய்...
WPL 2025: 16 வயது மதுர பொண்ணு... ரூ.1.60 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை அணி - யார் இந்த கமலினி?
2008-இல் தொடங்கிய ஆடவருக்கான IPL கிரிக்கெட் தொடர் இதுவரைக்கும் 17 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கும் IPL பாணியிலேயே மகளிர் பிரீமியர் லீக் (WPL) என்ற கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த வருடம் அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் நடக்க இருக்கிறது. இதற்கான ஏலம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் ஜி கமலினி என்ற தமிழக வீராங்கனையை மும்பை அணி நிர்வாகம் வாங்கியது. வெறும் 10 லட்ச ரூபாயை அடிப்படை விலையாக கொண்டிருந்த கமலினியை 1.60 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. யார் இந்த தமிழக வீராங்கனை கமலினி?
16 வயதுடைய கமலினி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் பயிற்சிக்காக தனது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். இவரின் தந்தை குணாளன் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். U19 மகளிர் டி20 டிராபியில் 8 ஆட்டங்களில் 311 ரன்களுடன் இரண்டாவது டாப் ஸ்கோரராக இருந்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற அண்டர் 19 கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 311 ரன்களை கமலினி குவித்திருக்கிறார். இதை அடுத்து, அவர் இந்திய அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் கமலினி 79 ரன்கள் குவித்து இருக்கிறார்.
தற்போது அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணியில் தேர்வாகி இருக்கிறார். அதில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் கமலினி 44 ரன்கள் குவித்து இருக்கிறார். ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக திகழும் கமலினிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.