செய்திகள் :

Zakir Hussain: ``அவருடன் பணியாற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

post image
பிரபல தபேலா இசைக் கலைஞரும், இயக்குநர், நடிகருமான ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால், நேற்றிரவு காலமானார்.

நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

ஜாகிர் உசேன்

அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "ஜாகிர் பாய் எல்லோருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கக்கூடியவர். தபேலாவை உலகளவில் எடுத்துச் சென்ற ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவரது இறப்பு நம் அனைவருக்கும் பேரிழப்புதான். 10 வருடங்களுக்கு முன்பு அவருடன் இணைந்து அவருடன் பணியாற்றி இருந்தாலும் தற்போது அவருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன்.

உங்களை உண்மையிலேயே மிஸ் பண்ணுவோம். அவரது குடும்பத்தினரும், உலகெங்கிலும் உள்ள அவரது எண்ணற்ற மாணவர்களுக்கும் இவரின் இழப்பைத் தாங்கும் வலிமையைப் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Zakir Hussain's Vikatan Interview: "மருதநாயகம் படத்துக்கு இசையமைக்க ஆசைப்படறேன்..." - ஜாகிர் உசேன்

பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால், நேற்றிரவு காலமானார். அவர் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனிடையே ஜாகிர் உசேன் 1997 -ல் விகடனுக்கு நேர்காணல் அளித்திருந்தார... மேலும் பார்க்க

`சில்க் அறிமுகம் முதல் 1000-க்கும் மேற்பட்ட படங்கள் வரை' - வினுசக்ரவத்தியின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

ரஜினி, சத்யராஜ், அஜித், விஜய் என அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கும் வினு சக்ரவர்த்தியின் பிறந்த நாள் (15.12.1945) இன்று.1945-ல் உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, சென்னையில்... மேலும் பார்க்க

Vignesh Shivan: ``அரசு சொத்தை நான் விலைக்கு கேட்கல..!'' - எழுந்த சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் பதில்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `லவ் இன்ஸுரன்ஸ் கம்பேனி' திரைப்படம் உருவாகி வருகிறது.சமீபத்தில் அவர் புதுச்சேரிக்கு சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக ஒ... மேலும் பார்க்க