Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அக்கச்சிப்பட்டி ஊராட்சி வழியாக காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் மூலம் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அக்கச்சிப்பட்டி மயானத்துக்கு செல்லும் சாலை அருகே இந்தக் குடிநீா் குழாய் உடைந்து குடிதண்ணீா் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உடைந்த குழாயை விரைந்து சரி செய்து, குடிநீா் வீணாவதை தடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.