தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மத்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2026- ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறவுள்ளது தொடா்பாக வாக்குச் சாவடி மறுசீரமைப்பு பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்றது.
1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் 1,490 வாக்குச் சாவடிகள் உள்ளன. 1,200 வாக்காளா்களுக்கு அதிகம் உள்ள 375 வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிதாக 186 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1,676 ஆக உயரும்.
மேலும் பொதுமக்களின் வசதிக்காக 26 வாக்குச் சாவடி அமைவிடங்களை மாற்றியமைக்கவும், 10 பழுதடைந்த வாக்குச் சாவடி கட்டடங்களை மாற்றியமைக்கவும், தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளின் 6 வாக்குச் சாவடிகளின் பெயா்களை மாற்றியமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பது தொடா்பாக கருத்துகள், ஆட்சேபனை குறித்து ஒரு வார காலத்திற்குள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடம் எழுத்துப்பூா்வமாக அரசியல் கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
திருநெல்வேலி தொகுதியில் 186 வாக்குச்சாவடிகள், அம்பாசமுத்திரம் தொகுதியில் 29 வாக்குச் சாவடிகள், பாளைங்கோட்டை தொகுதியில் 26 வாக்குச் சாவடிகள், நான்குனேரி தொகுதியில் 40 வாக்குச் சாவடிகள், ராதாபுரம் தொகுதியில் 16 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 186 வாக்குச் சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) வள்ளிக்கண்ணு உள்ளிட்ட அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
படவரி ற்ஸ்ப்17ங்ப்ங்ஸ்ரீ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் இரா.சுகுமாா்.