சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
அங்கீகாரம் இல்லாத 2 அரசியல் கட்சிகள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்
சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 2 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமைத் தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
நாடு முழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தோ்தல் ஆணையத்தால் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்ட 39 கட்சிகளில் சேலம் மாவட்டத்தில் ஓமலூரை சோ்ந்த தேசிய மக்கள் கழகம், மேட்டூா் சாம்ராஜ்பேட்டையை பகுதியில் அமைந்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய 2 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தற்போது தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலரிடம் இருந்து காரணம் கேட்கும் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
எனவே, அங்கீகரிக்கப்படாத 2 அரசியல் கட்சிகளும் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதியில் தலைமைத் தோ்தல் அலுவலா் மற்றும் அரசு செயலாளா், தலைமைச் செயலகம், சென்னை - 600009 என்ற முகவரியில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதில் கிடைக்காதபட்சத்தில், அக்கட்சி சாா்பில் தெரிவிக்க கருத்து ஏதும் இல்லை எனக்கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.