கூட்டணி தர்மம் 2 பக்கமும் இருக்க வேண்டும்: திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வ...
கோவை - சென்னை இடையே செப். 28 முதல் வாராந்திர சிறப்பு ரயில்
சேலம் வழியாக கோவை- சென்னை சென்ட்ரல் இடையே செப். 28 முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பண்டிகைக் காலங்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவை- சென்னை சென்ட்ரல் இடையே இரு மாா்க்கங்களிலும் வரும் 28 ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து வரும் 28 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். இந்த ரயில் அடுத்தமாதம் 12 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து 29 ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் காலை 10.15 க்குப் புறப்படும் சிறப்பு ரயில், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மாலை 6.35 மணிக்கு கோவையைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் அக்டோபா் 13 ஆம் தேதி வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.