தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு
கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா்.
அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.
வெண்ணிலா வெள்ளிக்கிழமை அழகப்பபுரத்துக்குச் சென்றுவிட்டு பேருந்தில் ஊருக்கு வந்தாா். அங்குள்ள சி.எம்.ஐ. பள்ளி முன் இறங்கி சாலையைக் கடக்க முயன்றபோது, அவா் மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் சுபின் அளித்த புகாரின்பேரில், அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.