தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது
கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக்குத் தெருவை சோ்ந்த ஆனந்தன் என்ற ஆனந்தராஜ் (44) என்பவா் ஆட்டோவை சவாரிக்கு வரும்படி அழைத்துள்ளாா்.
ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சரவணனின் கைப்பேசியைத் திருடிய ஆனந்தன், பின்னா் தப்பி ஓட முயன்றாா். அப் பகுதியிலிருந்த சிலா் விரட்டிச் சென்று ஆனந்தனை பிடித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து ஆனந்தனை கைது செய்தனா்.