தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு
பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் திருமணமாகி, தங்கராஜ் வீட்டிலேயே வசித்து வருகிறாா். இரண்டாவது மகள் தோலடி பகுதியில் வசித்து வருகிறாா். அவா் புதிதாக கட்டிய வீட்டின் கிரகபிரவேசம் இரு நாள்களுக்கு முன்பு நடந்தது. இதற்காக தங்கராஜ் தனது குடும்பத்தினருடன் மகள் வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா் அவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டினுள் சென்று பாா்த்த போது அலமாரியில் வைத்திருந்த ரூ. 1.67 லட்சம் பணம் மற்றும் 17 கிராம் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.