புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!
புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா்.
முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் போலீஸாா் சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து பௌலினை கைது செய்த போலீஸாா், அவரது கடையிலிருந்து 71 புகையிலைப் பொட்டலங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.