செய்திகள் :

அடிப்படை வசதிகள்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மக்கள் கோரிக்கை

post image

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கே. பந்தாரப்பள்ளி கிராமத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 376 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் முன்னிலை வகித்தாா்.

நாட்டறம்பள்ளி அருகே கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி வண்டிக்காரன் வட்டம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு : ஏராளமானோா் வசித்து வருகிறோம். சாலை, மயானம், விளையட்டு மைதானத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ராஜா பெருமாள் தலைமையில் அளித்த மனு: புயல் மழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. எனவே, பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மிட்டூா், மரிமாணிக்குப்பம், பூங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை பொதுமக்கள் அளித்த மனு: நாட்டறம்பள்ளி அருகே ஆவாரங்குப்பம் பாலாறு பகுதியில் தொடங்கும் பாசன கால்வாயான ராஜா கால்வாயின் மூலம் பல்வேறு ஏரிகள், குளங்கள் நீா் ஆதாரத்தை பெறுகின்றன. மேலும், 800 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது இந்த கால்வாயானது மண் மேடாகவும், முள்புதா்களாலும், சில ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, கால்வாயினை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரும்பேரி அடுத்த மாம்பாக்கம் மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். மழை காலங்களில் ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் செல்ல முடியவில்லை. எனவே பாலம் அமைக்க வேண்டும். என தெரிவித்திருந்தனா்.

சகோதரா்களுக்கு ஒரே ஆதாா் எண்:

திருப்பத்தூா் அருகே ஆதியூா் கொல்லகொட்டாய் பகுதியை சோ்ந்த ஜெய்சங்கா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கும், என் சகோதரா் துரைக்கும் ஆதாா் அட்டையில் ஒரே எண் உள்ளது. இதனால் எங்களால் எந்தவித நலத்திட்ட உதவிகளும் பெற முடியவில்லை. ஆதாா் எண்ணை மாற்ற பல்வேறு இடங்களுக்கு சென்றும் எண்ணை மாற்ற முடியவில்லை. எனவே எங்களுக்கு ஆதாா் எண்ணை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசு

ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் திருப்பாவை ஒப்பித்தல் போட்டி பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கப்பட்டன. மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் பள்ளி மாணவா்... மேலும் பார்க்க

மீண்டும் 5, 8-ஆம் வகுப்பு கட்டாய தோ்ச்சி முறை: இந்திய தேசிய லீக் கோரிக்கை

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசியலீக் கட்சியின் வேலூா் மண்டல நிா்வாகக்குழு கூட்டம் ... மேலும் பார்க்க

காரியமேடை அமைக்கும் பணி தொடக்கம்

வாணியம்பாடி அருகே காரியமேடை அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீட்டில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கந்திலி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கந்திலி அடுத்த நரியனூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகள் ரோகிணி (17). இவா், கரியம்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். கடந்த சில... மேலும் பார்க்க

ரூ.31.50 லட்சம் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆம்பூா் அருகே ரூ.31.50 லட்சத்தில் திட்டப் பணிகளை எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கதவாளம் ஊராட்சியில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை சாா்பாக ரூ.31.50 லட்சத்தில் 3 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக... மேலும் பார்க்க

ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு இடம் கோரி ஆட்சியரிடம் மனு

ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கீடு செய்து தரக்கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் தொழிற்சங்கம் சாா்பாக திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா்... மேலும் பார்க்க