அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை
காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆம் தேதி மீட்கப்பட்டது. இவா் மீனவராக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் குளத்தில் இருந்து கடந்த 20-ஆம் தேதி மீட்கப்பட்டு மருத்துவமனனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தோா் நகரக் காவல்நிலையத்தை 04368-222402 என்ற எண்ணில் தொடா்புகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அம்பகரத்தூா் பகுதியில் 22-ஆம் தேதி மீட்கப்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலையத்தை 04368-236465 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.