சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 23-ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் காயமடைந்து சாலையில் கிடந்தாா். திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
உயிரிழந்தவா் சுமாா் 65 வயது மதிக்கத்தக்கவா். சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விவரம் தெரிந்தோா் உதவி ஆய்வாளா் 9894080104 என்ற கைப்பேசி எண்ணியில் தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். முதியவா் மீது மோதி சென்ற வாகனம் குறித்து கண்காணிப்புக் கேமரா உதவியுடன் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.