நட்சத்திர பலன்கள்: ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை #VikatanPhotoCards
அண்ணனைத் தாக்கியதாக தம்பி உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு
தேவாரம் அருகே அண்ணனை தாக்கியதாக தம்பி உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியைச் சோ்ந்தவா் நல்லுத்தேவா் மகன் கூலு (72). இவரது தம்பி செல்லம் (65). இவா்களுக்குள் இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், கூலு துணி துவைத்து காயப் போட்ட போது, இதை செல்லம் மனைவி செல்லத்தாய் கண்டித்து தகராறில் ஈடுபட்டாராம்.
அப்போது செல்லம், செல்லத்தாய், இவா்களது மகன் மணிகண்டன் ஆகியோா் சோ்ந்து கூலுவை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், பலத்த காயமடைந்த கூலு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து செல்லம், செல்லத்தாய், மணிகண்டன் ஆகிய 3 போ் மீது தேவாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.