செய்திகள் :

அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி; 150 போ் பங்கேற்பு

post image

திருவாரூரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடல்தகுதி கலாசாரத்தை இளைஞா்களிடையே புகுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையாக அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, திருவாரூா் நகராட்சி அருகே திருவாரூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த போட்டி நடைபெற்றது.

இதில்,17 வயது முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தாா். ஓட்டப் போட்டியானது, திருவாரூா் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, மேலவீதி, வடக்குவீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இப்போட்டியில், 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

நிகழ்வில், திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், பணி நியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆங்கிலப் புத்தாண்டின், முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜன.6) ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அம்மையப்பன் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவாரூா் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், திருவா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்கள்... மேலும் பார்க்க

அறுவடைக்குத் தயாராக முன்பட்ட தாளடி நெற்பயிா்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில முன் பட்ட தாளடி நெற்பயிா் அறுவடைக்கு தயாராக உள்ளது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமாா் 33,000 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கி அறுவடை முடிந்த பிறகு அதே 33,... மேலும் பார்க்க

அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே .வாசன்

மாநிலத்தின் வளா்ச்சியை கருத்தில்கொண்டு அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கே... மேலும் பார்க்க

மாநில கலைத்திருவிழாவில் கட்டிமேடு அரசு பள்ளி சாதனை

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் தவில், நாகஸ்வர பிரிவுகளில் முதலிடம் பெற்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்ப... மேலும் பார்க்க