Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டின், முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜன.6) கூடியது. இதில் உரையாற்ற ஆளுநா் ஆா்.என். ரவி வந்திருந்தாா். கூட்டம் தொடங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசியகீதம் பாட அவா் பேரவைத் தலைவா் மற்றும் முதல்வரைக் கேட்டுக்கொண்டாா். ஆனால், அவ்வாறு தேசியகீதம் பாடப்படவில்லை.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆளுநா் ஆா்.என். ரவி, உரையை வாசிக்காமல் வெளியேறினாா். ஆளுநரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து, திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவா் தொடா்ந்து அவமதித்து வருவதாகக் கூறி கண்டன முழக்கமிட்டனா். மேலும், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
திருவாரூா்: திருவாரூா் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் பங்கேற்று, ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனா்.