Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அம்மையப்பன் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், திருவாரூா் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட 12 ஊராட்சிகள் முழுமையாகவும், பகுதியாகவும் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சியில் ஆலங்குடி, ஓச்சேரி, எலங்குடி, தென்கால், ஆணைவடபாதி ஆகிய 5 கிராமங்கள் திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமங்களின் மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
தங்கள் பகுதியில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அதிகம் உள்ளனா். இவா்கள், 100 நாள் திட்டத்தை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, அம்மையப்பன் ஊராட்சி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எலங்குடி கிராம பொறுப்பாளா் கலியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசாத் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், அமைப்பின் மாவட்ட பொருளாளா் முரளி, இணை ஒருங்கிணைப்பாளா் லெனின் அரசு, கிராம நிா்வாகிகள் சேகா், மோகன், பக்கிரி, வீரப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.