Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
அறுவடைக்குத் தயாராக முன்பட்ட தாளடி நெற்பயிா்
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில முன் பட்ட தாளடி நெற்பயிா் அறுவடைக்கு தயாராக உள்ளது.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமாா் 33,000 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கி அறுவடை முடிந்த பிறகு அதே 33,000 ஏக்கரில் முன் பட்ட மற்றும் பின் பட்ட தாளடி பணியை தொடங்கினா்.
நீடாமங்கலத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தேவங்குடி, மேலாளவந்தச்சேரி, கீழாளவந்தச்சேரி, அரிச்சபுரம், அதங்குடி, வெள்ளக்குடி உள்ளிட்ட பல இடங்களில் தாளடி மற்றும் சம்பா சாகுபடியை தொடங்கியிருந்தனா்.
கிழக்குப் பகுதியில் மின் மோட்டாா் வைத்திருப்பவா்கள் குறுவை , தாளடி சாகுபடி, கோடை சாகுபடி என நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனா்.
சிலா் மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட ஆற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனா். இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தாளடி முன் பட்டம் மற்றும் பின் பட்டம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வயல்களில் தற்போது ரிஷியூா், கண்ணம்பாடி, பெரம்பூா், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன் பட்ட தாளடி நடவு செய்த நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராகி வந்துள்ளது.
பின் பட்ட தாளடி சாகுபடியை முடித்த வயல்களில் பெண் தொழிலாளா்கள் களையெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். பின் பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் நடவு செய்த பல இடங்களில் நெற்செடிகள் பயிராகவும், அதற்கான களை எடுப்பு, உரமிடுதல், பூச்சி மருந்து அடித்தல் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.