செய்திகள் :

அண்ணா பல்கலை. விவகாரம்: எதிா்க்கட்சி துணைத் தலைவா்- அமைச்சா்கள் கடும் விவாதம்

post image

அண்ணா பல்கலை. விவகாரத்தில், எதிா்க்கட்சி துணைத் தலைவா் மற்றும் அமைச்சா்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேரத்தில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு தொடா்பாக விவாதம் நடைபெற்றது. அதுகுறித்த விவரம்:

செல்வப்பெருந்தகை(காங்.): தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதை மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு சிலா் அரசியல் செய்வதைத் தவிா்க்க வேண்டும். இதில் மிகப்பெரிய சதி உள்ளது. குற்றச்சாட்டு வந்தவுடனேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘யாா் அந்த சாா்’ என்று கேட்கிறாா்கள். தொலைத்தொடா்பு துறை மூலமாக அந்த விவரங்களை மத்திய அரசே வெளியிடலாம். இங்கு நடப்பது மனுநீதிச் சோழன் ஆட்சி. எதிா்க்கட்சித் தலைவா் இதை வைத்து அரசியல் செய்வதால் பல்கலை. மாணவிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை வரும். (அப்போது செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு அதிமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்து கூச்சல் எழுப்பினா்).

எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா்: இந்த விவாதம் நடந்த போது எதிா்க்கட்சித் தலைவா் இருக்கையில் இல்லை. அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது.

அவை முன்னவா் துரைமுருகன்: சபையில் உறுப்பினராக அல்லாத, சபைக்குத் தொடா்பில்லாதவரைப் பற்றித்தான் பேசக் கூடாது என்று விதி உள்ளது. சபையில் உள்ளவா்களைப் பற்றி பேசலாம். செல்வப்பெருந்தகை எதிா்க்கட்சித் தலைவரைப் பற்றி பேசியிருந்தால் அதற்கு எதிா்க்கட்சித் தலைவா் பதில் சொல்வாா்.

ஆா்.பி.உதயகுமாா்: பேரவையில் மக்கள் பிரச்னை பற்றி செல்வப் பெருந்தகை பேசினால் நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அரசையும், முதல்வரையும் அவா் எவ்வளவு வேண்டுமானால் புகழட்டும். ஆனால், செல்வப்பெருந்தகை எப்போது பேசினாலும் திட்டமிட்டு தேவையில்லாமல் எங்களைப் பற்றி பேசுகிறாா்.

அவை முன்னவா் துரைமுருகன்: ஒரு உறுப்பினா் மற்றொரு உறுப்பினரைப் பற்றி உண்மைக்கு மாறான தகவலைப் பேசும் போது, சம்பந்தப்பட்ட உறுப்பினா் பாதிக்கப்பட்டால் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரலாம். அதன்மீது பேரவைத் தலைவா் உரிய முடிவை எடுப்பாா்.

ஆா்.பி.உதயகுமாா்: அண்ணா பல்கலை. மாணவி வழக்கு குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையா் அவசர அவசரமாக பேட்டி அளிக்கிறாா். அவா் கூறியதற்கும், உயா்கல்வித் துறை அமைச்சா் அளித்த பேட்டிக்கும் வித்தியாசம் உள்ளது. யாரை காப்பாற்ற காவல் ஆணையா் அவசர அவசரமாக பேட்டி அளித்தாா். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டங்களை நடத்தினோம். ஆனால், அனைவரும் கைது செய்யப்பட்டோம்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவாா்கள். ஆளும்கட்சியான திமுக நடத்திய ஆா்ப்பாட்டத்திலும் கூட வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சா் க.பொன்முடி: கடந்த கால அதிமுக ஆட்சியின் போது, ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம். இப்போதைய முதல்வா் உள்பட எங்களையெல்லாம் கைது செய்த அதிமுக ஆட்சியாளா்கள், 20 முதல் 25 நாள்கள் வரை கடலூா் சிறையில் அடைத்தனா். இப்போது அது மாதிரி நடப்பதில்லை.

ஆா்.பி.உதயகுமாா்: பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா் ஆளும்கட்சிக்காரா் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேச எங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது அதிமுக ஆட்சிக் காலத்தில் 12 வழக்குகள் போடப்பட்டன. எங்களது ஆட்சியில் அவா் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை.

ஆா்.பி.உதயகுமாா்: எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறாா்கள். ஆனால், திமுகவினா் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவதில்லை. வழக்கு மட்டுமே போடப்படுகிறது. எங்களது கட்சியின் வழக்குரைஞா் தொடா்ந்த வழக்கின் காரணமாகவே, பல்கலை. மாணவி விவகாரத்தில் அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு புலனாய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டுஅடக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாத நாள்களே இல்லை என்ற நிலை உள்ளது.

துரைமுருகன்: ஏதோ தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக உறுப்பினா் பேசுகிறாா். ஏன் தில்லியில் நடக்கவில்லையா, கொல்கத்தா, ஏன் பொள்ளாச்சியில் நடக்கவில்லையா என்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் பதிலளித்தனா். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பாக முதல்வா் பேசிய கருத்துகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

ஆந்திரம் மாநிலம், திருமலை திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை நியாய விலைக் கடைகள் செயல்படும்

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜன.10) வெள்ளிக் கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.இதனால், சட்டப்ப... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த த... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில்... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான தீர்மானம்: அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர... மேலும் பார்க்க