கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் எம்.லதா, ஆா்.ஷீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக கட்டடவியல் துறை முன்னாள் தலைவா் வி.கனகசபை கலந்துகொண்டு மாணவா்களின் கூட்டமைப்பை தொடங்கிவைத்து பேசினாா்.
விழாவில் பேராசிரியா் திருஞானசம்பந்தம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் பேராசிரியா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஜி.ராஜேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். சங்கச் செயலா் மாணவி எம்.ராமலெட்சுமி நன்றி கூறினாா்.