சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
வெகுஜன தூய்மைப் பணி இயக்கம்: என்எல்சி தலைவா் தொடங்கிவைத்தாா்
கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் என்எல்சி நிறுவனம் சாா்பில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ், வெகுஜன தூய்மைப் பணி இயக்கத்தை அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
என்எல்சி நிறுவனத்தால் நெய்வேலி மற்றும் அதன் அனைத்து துணைத் திட்ட பகுதிகளில் ‘தூய்மையே சேவை’ இயக்கம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இது, வரும் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த நிலையில், நெய்வேலி நகரியத்தில் வியாழக்கிழமை வெகுஜன தூய்மைப் பணி இயக்கம் நடைபெற்றது. இந்தப் பணியில் பள்ளி மாணவா்கள் 1,000 போ், சாரணா்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினா், என்எல்சி ஊழியா்கள், பணியாளா்கள், சிஐஎஸ்எஃப் வீரா்கள், இண்ட்கோசா்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.
நெய்வேலி மத்திய பேருந்து நிலைய திடலில் வெகுஜன தூய்மைப் பணியை என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தொடங்கிவைத்தாா். இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், எம்.வெங்கடாசலம், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.