செய்திகள் :

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் வர்த்தக உறவைப் பாதிக்காது: இஸ்ரேல்

post image

அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் இஸ்ரேல் உடனான உறவைப் பாதிக்காது என இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதானி குழுமம், “சட்ட விதிமுறைகளை பின்பற்றியே அதானி குழுமம் செயல்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதானி குழுமம் ஆலோசித்து வருகிறது” என்று தெரிவித்தனர்.

மேலும், ”இதுபோன்ற சவால்களை அதானி குழுமம் சந்திப்பது இது முதல்முறையல்ல. இத்தகைய தாக்குதல்கள் அதானி குழுமத்தை வலுப்படுத்தவே செய்கின்றன” என அதானி தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி

இது அதானி குழுமம் இஸ்ரேலில் செய்துள்ள முதலீடுகளைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேல் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத், “அது எங்கள் பிரச்னை கிடையாது. இஸ்ரேலில் நடப்பதை அந்தப் பிரச்னை பாதிக்காது. இதனால் அதானி குழுமத்துடனான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்படாது.

இஸ்ரேல் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இடமாக இருக்கிறது. உலகச் சந்தைக்கு ஏற்ற விஷயங்களில் நாங்கள் சிறந்து விளங்குகிறோம். எங்களிடம் மேம்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நெருங்கிய உறவானது இரு அரசுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவாகும். இந்தியா பரந்த யோசனைகளை நிகழ்த்திப் பார்ப்பதற்கும் உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்துவதற்கும் ஒரு சூழலை உருவாக்கி வைத்துள்ளது. இந்தியா சரியான பாதையில் செல்கிறது” என்றார்.

இதையும் படிக்க | ஹிஸ்புல்லாக்களுக்கு ஆயுதங்கள்: ஈரான் விமானத்தை தடுத்து அனுப்பிய இஸ்ரேல்

ஹமாஸ் தாக்குதல் நினைவு நாள் அன்று பிரதமர் மோடி அழைத்துப் பேசியது குறித்து தெரிவித்த அவர், ”கடந்த அக்டோபர் 7 அன்று முதல் அழைப்பு பிரதமர் மோடியிடம் இருந்து வந்தது. இஸ்ரேலியர்கள் அதை மதிக்கிறோம். இந்திய அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல இது ஒரு வாய்ப்பு. இக்கட்டான நேரத்தில் எங்களுடன் நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவைப் பற்றி எங்களுக்கு நீண்ட காலமாக நல்ல புரிதலே உள்ளது" என்று கூறினார்.

அதானி குழுமம் வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் 70% பங்குகளை வைத்துள்ளது. மேலும், இஸ்ரேலுடன் இணைந்து ராணுவ டிரோன்கள் தயாரிப்பு மற்றும் செமிகண்டக்டர்கள் தயாரிப்பிலும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை

பாங்காக்: கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவித்தது.செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி ... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: மலேசியா, தாய்லாந்தில் 30 பேர் உயிரிழப்பு

பாரு: மலேசியாவிலும், தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளிலும் கடந்த வாரம் பெய்த அளவுக்கு அதிகமான பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.மலேசியாவின் கிழக்குக் கடலோரப்... மேலும் பார்க்க

தென் கொரியாவில் திடீர் அவசரநிலை: அதிபர் யூன் சுக் இயோல் அறிவிப்பு

சியோல்: தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார்.நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாலும், வட கொரிய ஆத... மேலும் பார்க்க

இந்திய சேனல்களுக்கு தடை கோரி வங்கதேச உயா்நீதிமன்றத்தில் மனு

டாக்கா: ‘வங்கதேச கலாசாரத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரி விதிக்க வேண்டும்’ என அந்நாட்டு உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், வங்கதேசத்த... மேலும் பார்க்க

இந்திய தூதரை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனம்: துணை தூதரகம் மீது தாக்குதல் எதிரொலி

டாக்கா: திரிபுரா மாநிலம் அகா்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் நுழைந்து சிலா் தாக்குதல் நடத்தியதற்கு எதிா்ப்பும் தெரிவிக்கும் விதமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதா் பிரணாய் வா்மாவை நேரில் அழைத... மேலும் பார்க்க

ரூ.9,828 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டா் உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: ரூ. 9,828 கோடி மதிப்பிலான எம்ஹெச்-60 ஆா் ரக ஹெலிகாப்டா் உபகரணங்கள் மற்றும் அதுதொடா்புடைய பிற சாதனங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் ... மேலும் பார்க்க