செய்திகள் :

`அதிசயக் குழந்தைக்கு' கித்தார் பரிசளித்த அமித் ஷா - யார் இந்த 7 வயது எஸ்தர்?

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது மிசோரம் பயணத்தின்போது, "Wonder Kid of Mizoram" என அழைக்கப்படும் 7 வயது சிறுமிக்கு கித்தாரை பரிசாக வழங்கினார்.

லால்துஹாவ்மி ஹ்நம்டே (Lalduhawmi Hnamte) மிசோரம் மாநிலத்தில் மிகவும் அறியப்பட்ட பாடகர். மிசோரம் மாநில தலைநகர் ஐஸ்வாலில் அவர் வந்தே மாதரம் பாடலை பாடியது மத்திய அமைச்சர் அமித்ஷாவை மிகவும் ஈர்த்துள்ளது.

அமித் ஷாவின் எக்ஸ் தளத்தில், "பாரதத்தின் மீதான அன்பே நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இன்று ஐஸ்வாலில் மிசோரமின் அதிசயக் குழந்தை வந்தே மாதரம் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன்.

பாரதத் தாயின் மீதான 7 வயது குழந்தையின் அன்பு அவரது பாடலில் வெளிப்பட்டது. அதுவே அதனைக் கேட்பதை மதிமயக்கும் அனுபவமாக மாற்றியது." என எழுதியுள்ளார்.

யார் இந்த எஸ்தர் லால்துஹாவ்மி ஹ்நம்டே?

மிசோரம் மாநிலம் லுங்லேய் மாவட்டத்தைத் சேர்ந்தவர் எஸ்தர். 2020ம் ஆண்டு "மா துஜே சலாம்" (தாய் மண்ணே வணக்கம்) பாடலை மிகவும் அழகாகவும் அதே நேரம் உணர்ச்சிப்பூர்வமாகவும் பாடினார்.

அவர் பாடிய தேசப்பற்றுமிக்க பாடல், அனைவரையும் ஈர்த்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்தது.

அவர், "இது அருமையானது மற்றும் பாராட்டுக்குரியது. இந்தப் பாடலுக்காக எஸ்தர் லால்துஹாவ்மி ஹ்நம்டே பற்றி பெருமைகொள்கிறேன்" என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

மேலும், மா துஜே சலாம் பாடலின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானும் அப்போது எஸ்தரின் வீடியோவைப் பகிர்ந்து பாராட்டினார்.

Mizoram: "அதிசய குழந்தைக்கு" கித்தார் பரிசளித்த அமித் ஷா

வைரல் பாடலால் எஸ்தருக்கு பல லட்சம் ரசிகர்கள் உருவாகினர். இப்போது அவருக்கு 10.8 லட்சம் யூடியூப் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்னதான அவரது மா துஜே சலாம் வீடியோ 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

மிசோரம் ஆளுநரின் சிறப்பு அங்கீகாரம் உட்பட, மாநில அரசின் பல விருதுகளைப் பெற்றுள்ளார் எஸ்தர்.

Symphony: ’இசை நடனமாடும் மேடை; இத்தாலி டு பண்ணைப்புரம்’ - இது சிம்பொனி இசை பயணித்த பாதை

இளையராஜா... அவரது திறமைக்கும் அவர் நமக்கு ஊட்டிய இசையமுதுக்கும் ‘ராஜா’ என்ற பெயர்தான் பொருத்தமானதாக இருக்கிறது. எல்லா புகழையும் அன்பையும் பெற்றபிறகும், தலைமுறைகள் கடந்த ரசிகர்களைப் பெற்றபிறகும், ராஜா ... மேலும் பார்க்க

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க