அனுமதியின்றி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 70 போ் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 70 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை போலீஸாா் கைது செய்தனா். இதனைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமையில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதில், 70 பேரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.