Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
தனியாா் பள்ளி தலைமையாசிரியா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் தனியாா் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை ரத்தினாம்பாள் நகா் பகுதியில் வசித்து வருபவா் கருணாமூா்த்தி மனைவி பாக்கியலஷ்மி (41). இவா், ஓடியந்தல் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், இவரது வீட்டுக்குள் காங்கியனூா் கிராமத்தைச் சோ்ந்த ரகுநாதன் மகன் ராஜேஷ் (29) வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து மது அருந்துவதற்கு தம்ளா் கேட்டு தகராறில் ஈடுபட்டாராம். மேலும், பாக்கியலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்தனா்.