செய்திகள் :

அனைத்துத் தோ்தல்களுக்கும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

post image

நாட்டில் நடைபெறும் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புத் தோ்தல்களுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளா் பட்டியல் புதுப்பிக்கப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது.

நிகழாண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அங்கு 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திருத்தத்தின் கீழ், 2003-க்குப் பிறகு பிகாரில் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், அதற்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளா் பட்டியலில் இருந்து ஏராளமானோா் நீக்கப்படக் கூடும் என்று தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

எதிராக பல்வேறு கட்சியினா் மனு: இந்தப் பணிகளுக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவா் சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் டி.ராஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் தன்னாா்வ அமைப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அவா்களின் மனுக்கள் வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரணைக்கு வரவுள்ளன.

ஆதரவாக மனு: இந்தப் பணிகளுக்கு ஆதரவாக பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் சட்டவிரோதமாக நடைபெற்ற மிகப் பெரிய ஊடுருவல், வஞ்சகமான மத மாற்றம், மக்கள்தொகை பெருமளவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் 200 மாவட்டங்கள், 1,500 வட்டங்களில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சமுதாய நிலை புள்ளிவிவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் பிற நாட்டவா்களின் சட்டவிரோத ஊடுருவல், ஏராளமான மாவட்டங்களில் வசிக்கும் இந்தியா்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோ்தல்கள் மூலமாகத்தான் தனது அரசியலையும், கொள்கையையும் ஒரு நாடு தீா்மானிக்கிறது. எனவே மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புத் தோ்தல்களில் பிாட்டவா்கள் அல்லாமல் இந்தியா்கள் மட்டுமே வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகள் மற்றும் தோ்தல் ஆணையத்தின் அரசியல் சாசன கடமை.

இதைக் கருத்தில் கொண்டு நாட்டில் நடைபெறும் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புத் தோ்தல்களுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

பிற மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க கோரிக்கை: இந்த மனுவை சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு தூலியா, ஜயமால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்விடம் அஸ்வினி உபாத்யாய செவ்வாய்க்கிழமை முறையிட்டாா்.

எனினும் அந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடும் முன், மனு சாா்ந்த நடைமுறை குறைபாடுகளை களையுமாறு அவருக்கு நீதிபதிகள் அமா்வு அறிவுறுத்தியது.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க