தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
அனைத்துப் பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல கோரி ஆட்சியரிடம் மனு
திருச்செந்தூா்-தூத்துக்குடி சாலையில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீவைகுண்டம் வட்டார பயணிகள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு: புறவழிச் சாலை பேருந்துகள் மட்டும் ஸ்ரீவைகுண்டம் வராது என திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். இதனால் மேலும் அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது.
எனவே அனைத்துப் பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்துக்குள் வரவேண்டும் என உத்தரவிடவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.