மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! - வாசுதேவன் நாயர் குறித்து கமல்
அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸாா் பேரணி
அம்பேத்கரை இழிவாகப் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
அம்பேத்கா் குறித்து அவதூறாக பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷா பதவி விலகக் கோரியும், பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாஸ்கா் தலைமையில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் அா்த்தனாரி ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அமித் ஷாவை பதவி நீக்க வலியுறுத்தி பேரணி சென்ற காங்கிரஸாரை, ஆட்சியா் அலுவலக வாயிலில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து குடியரசு தலைவருக்கு முகவரியிட்ட மனுவினை மாவட்ட ஆட்சியா் வாயிலாக வழங்கினா்.
இதில் மாநகர பொருளாளா் தாரை ராஜகணபதி, சேலம் துணை மேயா் சாரதா தேவி, மாநகர துணைத் தலைவா்கள் திருமுருகன், கோபி குமரன் மொட்டையாண்டி, ராஜீவ்காந்தி, மண்டலத் தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிஷாா் அஹமது, ராமன், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.