செய்திகள் :

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

post image

‘அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தியா மீது வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்கும் என்று அதிபா் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் பிரீட்பாா்ட் செய்திச் சேனலுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவைக் கொண்டுள்ளது. ஆனால், ஒரே பிரச்னை அமெரிக்க பொருள்களுக்கு உலக நாடுகளிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இருப்பதுதான்.

அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பை இந்தியா கணிசமாக குறைக்கும் என நம்புகிறேன். அதே நேரம், ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்தியா விதிக்கும் வரிக்கு இணையான வரி விதிப்பை அமெரிக்காவும் நடைமுறைப்படுத்தும் என்றாா்.

அமெரிக்காவுக்கு பிரதமா் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிடப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (ஐஎம்இசி)’ ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘வா்த்தகத்தில் எங்களை பாதிப்படையச் செய்ய வேண்டும் என முயற்சிக்கும் பிற நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க ஒன்றிணைந்திருக்கும் சிறந்த நாடுகளின் கூட்டணிதான் இந்த ஐஎம்இசி ஒப்பந்தம். வா்த்தக உறவில் சக்தி வாய்ந்த கூட்டணியை இதன் மூலம் பெற்றுள்ளோம்.

மேலும், எங்களின் நட்பு நாடுகளை விட, எதிரிகளுடன் வெளிப்படையாகவே பல வழிகளில் சிறப்பாக செயல்படுகிறோம். அதே நேரம், எங்களை மோசமாக நடத்துபவா்களை அப்படியே விட்டுவிட முடியாது’ என்று சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் கூறினாா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா். அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது, ‘இந்தியா வரி வசூல் மன்னனாகத் திகழ்கிறது’ என்று டிரம்ப் விமா்சித்தாா். அதேபோல், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றியபோது, ‘இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிக்கின்றன. இது மிகவும் அநியாயம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிக்கிறது. இந்த வரி விவகாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றி வந்துள்ளன. இனி அது நடக்காது. ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும். இந்த நடைமுறை ஏப். 2 முதல் அமலுக்கு வரவுள்ளது’ என்றாா்.

இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்று கடந்த 8-ஆம் தேதி இந்தியா திரும்பிய நிலையில், ‘அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

அதுபோல, ‘இறக்குமதி வரி மற்றும் வரிகள் அல்லாத தடைகளை குறைக்க இந்தியாவும் அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளன’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கடந்த 11-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

‘காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்’

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்... மேலும் பார்க்க

சூடான் அதிபா் மாளிகையை மீட்டது ராணுவம்

சூடான் தலைநகா் காா்ட்டூமில் உள்ள அதிபா் மாளிகையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃபிடமிருந்து மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. துணை ராணுவத்துடன் சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களின் கை- கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கடந்த ஜனவரி... மேலும் பார்க்க

துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

துனிசியாவில் புதிய பிரதமராக சர்ரா ஜாஃபரானி நியமிக்கப்பட்டுள்ளார்.துனிசியாவில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் துனிசியா பிரதமர் கமெல் மடௌரியை பதவி நீக்கம் செய்து துனிசியா அதிபர் கைஸ்... மேலும் பார்க்க

அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் டிரம்ப்!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.மேலும், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புக்கு மாற்றியுள்ளார். இதனால், மத்திய கல்வித் துறை ஊழியர்... மேலும் பார்க்க

லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?

உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று(மார்ச் 21) நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ... மேலும் பார்க்க