செய்திகள் :

அமைச்சர்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு: அதிமுக அமளி, வெளிநடப்பு!

post image

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி அளிக்கப்படாததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அமலாக்கத்துறை சோதனைக்குள்ளான அமைச்சர் கே.என்.நேரு, டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பெண்களுக்கு எதிராக பேசிய அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்கள் அளித்தனர்.

ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தீர்மானத்தை நிராகரித்ததால், அவரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேலும், தமிழக அரசுக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

இதனிடையே, அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் சட்டப்பேரவையிலேயே இருக்கிறார்.

இதையும் படிக்க : தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

முதல்வருக்கு பாராட்டு விழா: கோவி. செழியன் அறிவிப்பு!

தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி. செழியன் பேரவையில் அறிவித்துள்ளார். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ம... மேலும் பார்க்க

இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!

இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்ற விவகாரத்தில், கடையின் உரிமையாளர் என கூறப்படும் கவிதாவின் சகோதரர் நயன் சிங், சார்பில் இன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதர... மேலும் பார்க்க

சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாறு அணையில் மூழ்கி பலி

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆழியாறு அணையில் மூழ்கி பலிகோவை: சென்னையில் இருந்து சுற்றுலா வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் ஆழியாறு அணையின் நீரில் மூழ்கி பலியாகினர்.பொள்ளாச்சி அ... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்! - பள்ளிக்கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!!

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளிகளுக்கும் 100% தேர்ச்சி வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் அன்பில் மகே... மேலும் பார்க்க

நெல்லை இருட்டுக்கடை எனக்கும் சொந்தம் - நயன் சிங்

நெல்லை: திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா எனக்கும் சொந்தமானது என்று உரிமையாளர் கவிதா சிங்கின் சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க