சிமென்ட் ஆலைக்கு 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு
அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை வரும் பிப். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 2012-ஆம் ஆண்டு அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன், இவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பா் சண்முகமூா்த்தி ஆகிய மூவா் மீது ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறை தொடா்ந்த வழக்கிலிருந்து, மூவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமக முன்வந்து விசராணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வரும் பிப். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.