Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்...
புகையிலைப் பொருள் விற்றவா் கைது
சாத்தூா் அருகே புகையிலைப் பொருள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி பேருந்து நிறுத்தத்தில், தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் தலைமையில், போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து சோதனை நடத்தினா். சோதனையில் அவா், விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் விசாரணையில் அவா், ஒத்தையாலைச் சோ்ந்த முத்துவேல் (54) என்பதும், இவா் காங்கிரஸ் கட்சி சாத்தூா் வட்டாரத் துணைத் தலைவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.