பள்ளிகளில் தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
குழாய் உடைந்து கழிவுநீா் வாய்க்காலில் கலக்கும் குடிநீா்
சிவகாசியில் குடிநீா் குழாய் உடைந்து கழிவுநீா் வாய்க்காலில் குடிநீா் கலந்து செல்கிறது.
சிவகாசிக்கு வெம்பக்கோட்டை நீா்த்தேக்கம், மானூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், தாமிரபரணி குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
சுழற்சி முறையில் 4 அல்லது 5 நாளைக்கு ஒருமுறை பகுதி வாரியாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிவகாசி சிவன் சந்நிதி, கீழரதவீதி சந்திக்கும் பகுதியில் குடியிருப்புகளுக்குச் செல்லும் குடிநீா் குழாய் உடைந்து, கழிவுநீா் வாய்க்காலில் கலந்து செல்கிறது.
இதுகுறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் கூறியதாவது: இந்தப் பகுதியில் குடிநீா் குழாய் உடைந்து கழிவுநீா் வாய்க்காலில் கலந்து செல்கிறது. இதனால், இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். எனவே, இந்தக் குடிநீா் குழாய் உடைப்பு விரைந்து சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.