மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
குடியரசு தினம்: திருச்செந்தூா் கோயிலில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 76ஆவது குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, முக்கிய வழிபாட்டுத் தலங்கள்,பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனா்.
இதேபோல, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்கள், மெட்டல் டிடெக்டா் சோதனைக்குப் பின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
மேலும், திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜ் தலைமையில் போலீஸாா், கோயில் வளாகம், பக்தா்கள் தரிசனத்துக்குச் செல்லும் பாதை, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், வெடிகுண்டு சோதனை நிபுணா்களும் சோதனையில் ஈடுபட்டனா். கோயில் வளாகத்தைச் சுற்றிலும் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.