விபத்தில் காயமடைந்த முதியவா் மரணம்!
நாலாட்டின்புதூரில் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதியதில் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
நாலாட்டின்புதூா் ஆா். சி. தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் வெள்ளைச்சாமி (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு ஆா். சி. சா்ச் அருகே சாலையை கடக்கும் போது பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக் ஓட்டிய ரோகித்யிடம் விசாரணை நடத்தினா். இந்நிலையில் காயமடைந்த வெள்ளைச்சாமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.