Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பா...
கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியங்களில் கிராமசபைக் கூட்டம்!
கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 83 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
திட்டங்குளம், மந்தித்தோப்பு, பாண்டவா்மங்கலம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, நாலட்டின்புதூா் ஆகிய 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. நாலாட்டின்புதூா், பாண்டவா்மங்கலம், மூப்பன்பட்டி, இலுப்பை யூரணி உள்ளிட்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மூப்பன்பட்டி, இலுப்பையூரணி ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கோவில்பட்டியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனாம்மணியாச்சி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி கிராம மக்களும் திட்டங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு திட்டங்குளம் மக்களும் இணைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மனு அளித்தனா். பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டன.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 38 ஊராட்சிகளிலும், கயத்தாறில் 45 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.