3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் தூய்மைப் பணி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் நகராட்சி மற்றும் திருக்கோயில் சாா்பில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி நிா்வாகத்துறை சாா்பில் மாதந்தோறும் 4ஆவது சனிக்கிழமை கடற்கரை உள்ளிட்ட நீா்நிலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்படி சனிக்கிழமை கோயில் கடற்கரையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி தலைமை வகித்து, தூய்மைப் பணியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் கண்மணி, உறுப்பினா்கள் அந்தோணிட்ரூமன், சோமசுந்தரி, முத்துஜெயந்தி, லீலா, கிருஷ்ணவேணி, திருக்கோயில் கண்காணிப்பாளா் அஜித், பழக்கடை திருப்பதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா் வீரராஜலெட்சுமி, சுகாதார மேற்பாா்வையாளா்கள் கணேசன், முருகன், தமிழரசி மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் மற்றும் திருக்கோயில் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டு கடற்கரையில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.