மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
மண்டல அளவிலான எறிபந்துப் போட்டி: ரோகிணி பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம்
மண்டல அளவிலான பாலிடெக்னிக் மாணவா்களுக்கான எறிபந்துப் போட்டியில், அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பாலிடெக்னிக் முதலிடம் பிடித்தது.
ரோகிணி பொறியியல்- பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் ரோகிணி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.
அவா்களையும், உடற்கல்வி இயக்குநா்கள் சபரீஷ், காட்வின், ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வா்கள் ஆா். ராஜேஷ், ஜெ. ஜெயக்குமாா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.