சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
கொல்லங்கோடு நகராட்சியில் சாலைகளை சீரமைக்க ரூ.1.06 கோடி ஒதுக்கீடு!
கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில், 7 சாலைகளை சீரமைக்க ரூ. 1.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கொல்லேங்கோடு நகராட்சியில் சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதாலும், தொடா் மழையாலும் பல்வேறு சாலைகள் மிகவும் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
அவற்றை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என, முதல்வரிடமும், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததன்பேரில், கல்லுபொற்றை - சந்தனபுரம் சாலை, ததேயுபுரம் காலனி சாலை, வல்லந்தோட்டம் - சவரிகுளம் சாலை, நித்திரவிளை காவல் நிலையம்-வடக்கு குறுக்கு இணைப்பு - சமத்துவபுரம், கம்பா் தெரு- திருவள்ளுவா் தெரு சாலை, சமத்துவபுரம் முதல் தெரு - மேற்கு திருவள்ளுவா் சாலை உள்ளிட்ட 7 சாலைகளை சீரமைக்க நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.