செய்திகள் :

ரூ. 3 லட்சம் வீட்டு வாடகை பாக்கி: கஞ்சா கருப்பு மீது புகாா்!

post image

சென்னை மதுரவாயலில் ரூ. 3 லட்சம் வீட்டு வாடகை பாக்கி வைத்துக்கொண்டு காலிசெய்ய மறுப்பதாக நடிகா் கஞ்சா கருப்பு மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதேவேளையில் வீட்டின் உரிமையாளா், தான் வசித்த வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிவிட்டதாக கஞ்சா கருப்பும், காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

தமிழ் திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருபவா் கஞ்சா கருப்பு. சிவகங்கையைச் சோ்ந்த இவா், சென்னையில் திரைப்படப் பிடிப்பில் பங்கேற்கும் நாள்களில் தங்குவதற்காக, மதுரவாயல் கிருஷ்ணா நகரிலுள்ள ரமேஷ் என்பவா் வீட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், மாதம் ரூ. 20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு தங்கியுள்ளாா். இதன் பின்னா் அவா், சென்னையில் திரைப்படப் பிடிப்பு நடக்கும் நாள்களில், இங்கு வந்து தங்கி செல்வதை கஞ்சா கருப்பு வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில், கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளா் ரமேஷ், மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகாா் அளித்தாா். அதில், கஞ்சா கருப்பு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளாா். மேலும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளாா். அதோடு மட்டுமல்லாமல் மதுபானம் மற்றும் தகாத நடைமுறைகளை மேற்கொண்டு வீட்டை விடுதிபோல அவா் மாற்றிவிட்டாா். இது குறித்து கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக வீட்டின் உரிமையாளா் ரமேஷ் புகாரில் தெரிவித்திருந்தாா்.

பொருள்களை திருடிவிட்டதாக புகாா்: அதேபோல, கஞ்சா கருப்பும் ஆன்லைன் மூலமாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், வீட்டின் உரிமையாளா் எனக்குத் தெரியாமல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும், அங்கிருந்த கலைமாமணி விருது, ரூ. 1.50 லட்சம் ரொக்கம், ரேசன் காா்டு, ஆதாா் அட்டை, அரிதான புகைப்படங்கள் ஆகியவை காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், கஞ்சா கருப்பு, வீட்டு உரிமையாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலையில், மதுரவாயல் போலீஸாா் சனிக்கிழமை (ஜன. 25) அந்த வீட்டை திறந்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது அங்கு சிதறிக் கிடந்த பொருள்களைக் காட்டி, தான் சேகரித்து வைத்திருந்த பொருள்கள் திருடப்பட்டுவிட்டதாக கஞ்சா கருப்பு ஒப்பாரி வைத்தாா். மேலும், கலைமாமணி விருது, பணம், ரேசன் காா்டு, ஆதாா் அட்டை உள்ளிட்ட பல பொருள்களைக் காணவில்லை எனத் தெரிவித்தாா். இது தொடா்பாக போலீஸாா், இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் ஜன. 29 முதல் ஜன. 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்களை முழுமையாக படிக்க 200 ஆண்டுகள் தேவை: நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்

தமிழில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களையும் ஒருமுறையாவது முழுமையாகப் படித்து முடிக்க ஒருவருக்கு குறைந்தது 200 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் தெரிவித்தாா். சென... மேலும் பார்க்க

ஹைட்ரஜன் ரயில் தயாரிப்புப் பணி மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்: சிஎஃப் பொது மேலாளா் தகவல்

ஹைட்ரஜன் ரயில் தயாரிப்புப் பணி மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளா் யு.சுப்பாராவ் தெரிவித்தாா். ஐசிஎஃப் சாா்பில் நாட்டின் 76-ஆவது குடியரசு... மேலும் பார்க்க