Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்...
நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அனைத்துக் கட்சிகள் சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரம் ஊராட்சியில் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் விசைத்தறி தொழிலாளா்கள், விவசாயிகள் அதிகம் உள்ளனா். இந்தப் பகுதியை ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பதாக அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அனைத்துக் கட்சிகள் சாா்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக, சிஐடியூ, ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், தவெக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.